
மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் ராஜுக்கும், அவரது மனைவி லலிதா குமாரிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் போனியை மணக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்துள்ளார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் வைத்து கல்யாணம் நடக்கவுள்ளதாம். திரையுலக பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க பிரகாஷ் ராஜ் திட்டமிட்டுள்ளாராம்.
1994ம் ஆண்டு லலிதா குமாரியை மணந்தார் பிரகாஷ் ராஜ். அவர்களுக்கு 3 குழந்தை
பிரகாஷ் ராஜின் திருமண ஏற்பாடுகளை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கவனித்து வருகிறாராம். இவர்தான் இந்தியில் வெளியான வான்டட் படம் மூலம் பிரகாஷ் ராஜை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக