புதன், 7 ஜூலை, 2010

ஒன்றியத்தின் நோக்கம் வெற்றியளிக்கும் – சிவாஜிலிங்கம் நம்பிக்கை

கூட்டமைப்பு ஒன்றிணைந்தால் மட்டுமே ஒன்றியத்தின் நோக்கம் வெற்றியளிக்கும் – சிவாஜிலிங்கம் நம்பிக்கை

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தின் நோக்கம் வெற்றியளிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியமாகும் எனத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின்   பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு நானும் சித்தார்த்தனும் முயற்சிகள் எடுத்து வந்தோம்.
இந் நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினராகிய நாமும் ஏனைய தமிழ்க் கட்சிகள் சிலவும் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினோம்.       இதில் ஏழு கட்சிகளாக இணைந்து தற் போது   ஒன்பதுகட்சிகள் ஒன்றிணைந்து  ஒரு தீர்க்கமான கொள்கையை வகுத்து வருகின்றோம்.
இவ்வாறு ஒன்றிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளினால் தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றியத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஒன்றி ணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இவ் ஒன்றியம் அமைக்கப்பட்டதன் நோக் கம் தேர்தலில் போட்டியிடுவதற்காக என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கருதக் கூடாது. அரசுடன் இணைந்திருக்கும் கட்சி ஒன்றுடன் இணைந்து தேர்தலில் ஒருபோதும் நாம் போட்டியிட மாட்டோம். இந்த ஒன்றியத்தில் கே.பி. என அழைக் கப்படும் குமரன் பத்மநாதனை இணை க்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார்.
அதற்கு ஏனைய கட்சிகள் அனுமதிக்கவில்லை.   குமரன் பத்மநாதன் அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர் எனக் கூறிவிட்டோம். இதேபோன்று பிரதி அமைச்சர் விநாய மூர்த்தி முரளிதரனையும் இணைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். அதற்கும் ஏனைய கட்சிகள் இடமளிக்க வில்லை.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து ஓர் தீர்வுக்கு வரவழைக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையும்போதுதான் அது சாத்தியமாகும்

கருத்துகள் இல்லை: