சனி, 10 ஜூலை, 2010

புலிகள், நிதியுதவி மூலம் ஊக்குவித்தவர்க ளில் புலம்பெயர்ந்த

புலம்பெயர்ந்தவர்களின் தார்மீகக் கடப்பாடு
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற் றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால் யுத்தத்துக்குப் பிந்திய பிரச்சினைகளுக்கான தீர்வு இன்னும் முழுமை பெறவில்லை.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்டவர்களின் சீவனோபாயம், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பனவே அவை. இவற்றுள் மீள்குடியேற்றமும் அது தொடர்பான விடயங்களும் முன்னுரிமை க்கு உரியன.

மீள்குடியேற்றப் படுபவர்களின் வீடுகள் இராணுவ நட வடிக்கையின் போது மோசமாகச் சேதமடைந்து விட் டன. ஒருசில வீடுகள் தப்பிப் பிழைத்திருக்கலாம். மற்றைய வீடுகள் எல்லாம் ஏறக்குறையத் தரைமட்ட மாகிய நிலை. எனவே, மீள்குடியேற்றத்தின் பிரதான பணி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாகவே உள்ளது.

மீள்குடியேற்றப்படும் அனைவருக்கும் உடனடியாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. எனினும், இயன்றளவு துரிதமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டு மென்பதால் பல நிறுவனங்களின் உதவியுடன் அப்பணியை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களும் இவ்விடயத்தில் உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இவ்வேண்டுகோளை விடுத்த பிரதியமைச்சர் புலம் பெயர்ந்தவர்களின் உதவி கிடைக்குமேயானால் இடம்பெயர்ந்த அனைவருக்கும் ஒரு வருடத்துக்குள் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க முடியும் எனக் கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இது ஒரு தார்மீகக் கடமை. இடம்பெயர்ந்த இம்மக்களின் வீடுகள் சிதைந்து சேதமடைந்ததற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒருவகையில் பொறுப்பாளிகள் என்பதை இங்கு குறி ப்பிடாதிருக்க முடியாது. நடைமுறைச் சாத்தியமற்ற தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் சொத்துகள் சேதமடைந்ததற்குப் பிரதான காரணம்.

பிரிவினைப் போராட்டத்தை நிதியுதவி மூலம் ஊக்குவித்தவர்க ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரதான இடம் வகி க்கின்றனர். இவர்கள் வழங்கிய பெருமளவு நிதியுதவியினால் தீவிரமடைந்த பிரிவினைப் போராட்டம் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கும் உடைமைகளின் அழிவுக்கும் காரணமாகியதே தவிர எந்தவிதமான சாதக விளைவையும் ஏற்படுத்தவில்லை.

எனவே, பிரிவினை யுத்தத்தின் விளைவாக வீடுகளை இழந்து நிற்பவர்களுக்குக் கைகொடுக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. பிரிவினை யுத்தத்துக்கு நிதியுதவி வழங்காதவர்களுக் கும் ‘உடன்பிறப்புகளின்’ துயர்துடைக்கும் கடப்பாடு இல்லாமலில்லை.

மீள்குடியேற்றம் பற்றி விமர்சனம் செய்யும் பாராளும ன்ற உறுப்பினர்கள் விமர்சனத்துடன் தங்கள் பொறு ப்பு முடிந்துவிட்டதெனக் கருதலாகாது. குறைந்த பட்சம், இம்மக்களுக்கு உதவ முன்வருமாறு புலம் பெயர்ந்தவர்களுக்கு வேண்டுகோளாவது விடுக்கலாமே.
தினகரன் தலையங்கம்

கருத்துகள் இல்லை: