திங்கள், 5 ஜூலை, 2010

T.N.A in Delhi, இணைந்து வேலை செய்யமாறு அறிவுறுத்தவே இவர்களை அவசரமாக இந்தியா அழைத்ததாக

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள்  நேற்று புதுடில்லி சென்றடைவு
புதிதாக அமைந்துள்ள 7 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து செயற்படுமாறு வற்புறுத்தல்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதுடில்லியை சென்றடைந்தது. இந்திய உள்துறையமைச்சர் ப. சிதம்பரத்தின் அழைப்பின் பேரிலேயே இக்குழு நேற்று புதுடில்லி பயணமானதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக கூட்டமைப்புக் குழு பேச்சு நடத்துமென எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சுமத்திரன் ஆகியோரே நேற்று மாலை 2 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 7 தமிழ் கட்சிகளின் கூட்டணி 'தமிழ் மக்கள் ஒன்றியம்' இல் இணைந்து வேலை செய்யமாறு அறிவுறுத்தவே இவர்களை அவசரமாக இந்தியா அழைத்ததாக அரசியல்அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: