சனி, 10 ஜூலை, 2010

சிங்கள் அரச ஊழியர்கள் தமிழையும் கற்று நாட்டில் சம

இன்னும் ஐந்து வருட காலத்தில் தமிழ் அரச ஊழியர்கள் சிங்களத்தையும் சிங்கள் அரச ஊழியர்கள் தமிழையும் கற்று நாட்டில் சம நிலை தோன்றக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதனையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.” யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் விட்ட பிழைகளினால் இந்த நாட்டு அரசியலில் குழப்பமான நிலைமை ஏற்பட்டதுடன் மொழிப் பிரச்சினையும் காணப்படுகின்றது.
இத்தகைய நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வகையில் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கும் போது, பொலிஸ் சேவையில் உள்ள 600 பேர் மட்டுமே தமிழ் தெரிந்தவாகளாகக் காணப்பட்டனர். அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பொலிசார் தமிழ் கற்றிருந்தார்கள்.
அதேபோன்று ஏனைய படையினரும் கூட தமிழைக் கற்று வருகின்றார்கள். கடந்த காலத்தில் இல்லாதவாறு இன்று தமிழும் சிங்களமும் அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் தமிழில் உரையாற்ற முடியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். கடந்த காலத்தில் தெல்லிப்பளை பகுதியில் நான் வருமானவரி அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளேன்.
உங்கள் மனதில் இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களான செல்வநாயகம் அமிர்தலிங்கம், தர்மலிங்கம், வி.பொன்னம்பலம் போன்றோருடன் அரசியலில் ஈடுபட்டதுடன் இந்தப் பகுதியிலும் கூட அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவன் நான்.
இன்று இங்கிருந்து எனது சேவையைத் தொடர்வதில் நான் பெருமகிழச்சி அடைகின்றேன்” என்றார்.

கருத்துகள் இல்லை: