சனி, 10 ஜூலை, 2010

கும்மிடிப்பூண்டி,இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டி: அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த வெற்றி -ராதிகா தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வேலைக்கு சென்று விட்டு வெற்றி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி ராதிகா கணவனுக்கு சாப்பிட சாப்பாத்தி கொடுத்தார். இதனைக் கண்ட வெற்றி, சாப்பிட சாப்பாடு ஏதும் செய்யாமல் சப்பாத்தி செய்து இருக்கிறாயே என்று திட்டினார்.

இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இக்குடும்ப சண்டையால் மனம் உடைந்த அகதிப்பெண் ராதிகா நள் ளிரவில் வீட்டில் எல்லோரும் தூங்கும்போது உடலில் மண் எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அகதிப்பெண் ராதிகா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: