சனி, 10 ஜூலை, 2010

துபாயில் தவிக்கும் தமிழர்கள், பாஸ்ப்போர்ட்டை கொடுத்தாலாவது இவர்கள் தமிழகம் திரும்பிவிடுவார்கள்

தமிழக தலைவர்களுக்கு  துபாயில் தவிக்கும் தமிழர்கள் கண்ணீர் கோரிக்கை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தை சேர்ந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக சார்சாவில் உள்ள பாகிஸ்தானி நடத்துன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்கு சென்றனர்.
ஒரு ஆண்டு வரை சாப்பாடு, தங்குமிடம், சம்பளம் கொடுத்த அந்த நிறுவனம் அதன்பிறகு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டது.   சாப்பாடு, தங்குமிடம் மட்டுமே கொடுத்து வேலை வாங்கிக்கொண்டது.
இதில் பலரும் ஊர் திரும்பிவிட்டனர்.  8 பேர் மட்டும் சம்பளமின்றி வேலை பார்த்துவந்தனர்.  ஒரு ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுக்க முடியாது என்று நிறுவனம் அறிவித்த பிறகு இவர்கள் இந்திய தூதரகம் மற்றும் இந்திய நலச்சங்கங்கள் போன்றவற்றில் உதவிகள் கேட்டும் சரியான உதவிகள் கிடைக்கவில்லை.
இறுதியாக 8 பேரும் சம்பளம் கேட்டு நீதிமன்ற படியேறி 4 தினார் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை அந்த நிறுவனம்.  மேலும் உணவையும் கொடுக்க மறுத்துவிட்டது. 
அதன்பிறகு குடிநீரும் கொடுக்கப்படவில்லை.

உணவுக்கு வழியின்றி ஆள் அரவமற்ற நேரங்களில் அறையில் இருந்து வெளியே வந்து சாலையில் கிடக்கும் பேப்பரை
பொறுக்கி அதனை விற்று இரண்டு தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே உண்ணும் நிலையில் உள்ளனர்.

இவர்களின் பாஸ்ப்போர்ட்டை கொடுத்தாலாவது இவர்கள் தமிழகம் திரும்பிவிடுவார்கள்.  அதையும் நிர்வாகம் கொடுக்க
மறுப்பதால் நிர்வாகம் கொடுத்த அறையை காலி செய்ய மறுத்து அங்கேயே தங்கி வருகின்றனர்.

ஆகவே தமிழக தலைவர்கள் எங்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசின் உதவியுடன் சம்பளத்துடன்
பாஸ்போர்ட் கிடைத்து தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று நக்கீரன் மூலமாக கோரிக்கை வைத்தனர்.

கருத்துகள் இல்லை: