வியாழன், 8 ஜூலை, 2010

கர்நாடக ஐகோர்ட்டில் பெண் வக்கீல் படுகொலை

கர்நாடக மாநில ஐகோர்ட் வக்கீல் ஒருவர் கோர்ட் வளாகத்திற்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வந்தவர் நவீனா. இவர் வழக்கம் போல் கோர்ட் பணிகளை பார்த்து விட்டு மதிய உணவு இடைவேளை நேரத்தில் மதியம் தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் சக வழக்கறிஞரான ராஜப்பா அங்கு வந்தார். இவர் தனது கையில் இருந்த கத்தியால் நவீனாவை பிடித்து அவரது கழுத்தை அறுத்தார். இந்த சம்பவம் கோர்ட் ஹால் எண் 4 அருகே நடந்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்த நவீனா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த வாலிபர் கையில் இருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தார், ஆனால் அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் இணைந்து ரத்தக்காயத்துடன் பிடித்தனர். இவரது தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலைக்கு காதல் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐகோர்ட் வளாகத்தில் பெண் வக்கீல் கொலை செய்யப்பட்டது இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: