சனி, 10 ஜூலை, 2010

வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்

கணித பாட ஆசிரியர் சுந்தர்ராஜன், பாடம் நடத்தும் போது, "ஒன்றில் அரை போனால் எவ்வளவு?' என கேட்டார். மாணவர் உபைது ரஹ்மான் சிரித்துக் கொண்டே, "அரை' என கூறியுள்ளார். வகுப்பில் இருந்த சக மாணவர்கள் சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுந்தர்ராஜன், உபைது ரஹ்மானின் பேன்ட், சட்டையை சக மாணவர்கள் மூலம் கழற்றினார். ஜட்டியை பாதி அவிழ்த்தபோது, மாணவர் கதறி அழுததால் விட்டுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர் உபைது ரஹ்மான், நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். அவரது தாய், இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் மனம் வெறுத்த மாணவர் உபைது ரஹ்மான், இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை.

நேற்று முன்தினம் (8ம் தேதி) பள்ளிக்குச் சென்ற சக மாணவர்கள், ஆசிரியரை கண்டித்து வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மாணவரை நிர்வாணப்படுத்திய சம்பவம், பிற மாணவர்கள் மூலம் நேற்று வெளியே தெரியத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முகமது யூனுஸ், ஜெகநாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலர் முத்துராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன், தாசில்தார் காமராஜ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினர். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பள்ளிக்கு வரவில்லை. கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்றிரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: