செவ்வாய், 6 ஜூலை, 2010

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பினை ஜெனரல் பொன்சேகா ஏற்றுள்ளார்

புலிகளின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தினது பொறுப்பினை ஏற்றுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா, புலிகளின் சர்வதேச தொடர்பாளராகவும் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந் தானந்த அளுத்கமகே நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை மற்றும் அவசரகாலச்கட்ட விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை இராணுவத் தளபதியாக்கியதும் இன்றுவரை அவர் உயிருடன் இருப்பதற்கும் மற்றும் இன்று அவர் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்திருப்பதும்  பாதுகாப்பு   அமைச்சின் செயலாளரின்   தயவினாலேயே ஆகும்.      ஆனால் இன்று அவர்  நன்றி மறந்தவராக செயற்படுகின்றார்.    அது மட்டுமல்லாது    ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க புலிகளின் தற்போதைய தலைவரான உருத்ரகுமாரனும் இந்த குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா இன்று புலிகளின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.    இலங்கைப் பிரஜையாகக் கூட இல்லாத அவர் இன்று நமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்.   பொன்சேகா நேர்மையானவராக இருந்தால் ஏன் அவரது மருமகனை நீதிமன்றத் தில் நிறுத்தாது இருக்கின்றார் எனக் கேட்க விரும்புகிறேன்.  அவ்வாறு அவர் செய்தால் தான் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதனாலேயே ஆகும்.
இன்று ஜனநாயகம் குறித்து பேசுகின்ற ஜெனரல் பொன்சேகா புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளையும் அதே நேரம் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக வும் அவர் செயற்பட்டு வருகின்றார்

கருத்துகள் இல்லை: