வியாழன், 22 செப்டம்பர், 2022

சிதம்பரம் தீட்சதர் கைது! தனது 14 வயது மகளுக்கு திருமணம் ..உடந்தையாக இருந்த 3 தீட்சிதர்கள் உட்பட ...

 kalaignarseithigal.com  - KL Reshma  :  தமிழ்நாடு  குழந்தை திருமணம் - சிறுமியை தீட்சிதருக்கு மணமுடித்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்: 3பேர் அதிரடி கைது!
14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்துவைத்துள்ள சிதம்பரம் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வடக்கு வீதியை சேர்ந்தவர் சோமசேகர். இவர் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் தீட்சிதராக உள்ளார். இவர் தனது 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய குழந்தை திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் புகார் எழுந்தது.


இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தை திருமணம் - சிறுமியை தீட்சிதருக்கு மணமுடித்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்: 3பேர் அதிரடி கைது!

அப்போது அவர் தனது மகளுக்கு வேறொரு தீட்சிதருடன் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான சோமசேகர் மீதும், சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் மீதும், பசுபதியின் தந்தை கணபதி மீதும் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
குழந்தை திருமணம் - சிறுமியை தீட்சிதருக்கு மணமுடித்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்: 3பேர் அதிரடி கைது!

பின்னர் சிறுமியின் தந்தை சோமசேகர், பசுபதியின் தந்தை கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்த சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் தலைமறைவாகினார். இதையடுத்து அவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்துள்ளனர்.

குழந்தை திருமணம் செய்து வைத்துள்ள சிதம்பரம் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: