வியாழன், 22 செப்டம்பர், 2022

1,725 கோடி மதிப்புள்ள 22 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்! மும்பை நவசேவா துறைமுகத்தில்

நக்கீரன் : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நவசேவா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிக அளவில் புகார் எழுந்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தது. கப்பல் மற்றும் இரயில் நிலையங்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவில் மும்பை நவசேதா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1,725 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை: