புதன், 21 செப்டம்பர், 2022

சிங்கள தீவினுக்கோர் பாலம் 1912 இல் ஆங்கிலேயர் செய்தி அது! பாரதியார் தீர்க்க தரிசனம் அல்ல! அவர் காலமானது 1921 ஆண்டு!

 ராதா மனோகர் : சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் அல்லது  உயர்ந்த தொலைநோக்கு சிந்தனை என்று அவ்வப்போது கூறப்படுகிறது.
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும்  .
தீர்க்க தரிசனமோ சிந்தனையோ அல்ல!
அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.
தலைமன்னாரிற்கும் மன்னாரிற்கும் இடையிற்றான்  தாமதமிருக்கிறது.
அக்கடல் சிறியதாய் 900 அடிக்கு ஒரு ஸ்தம்பம் அமைத்து பாலமிடப்படுகிறது
தற்போது மன்னருக்கும் மதவாச்சிக்கும் இடையில் 15 மையில் தூரம்  புகையிரத போக்குவரவு செய்யக்கூடியதாய் வேலை முடிந்திருக்கிறது
இதற்கான வண்டிகளுக்கு கொழும்பில் வேலை துரிதமாக நடக்கின்றன.
இந்திய அரசாட்சியார் அடுத்த வருஷத்திலும் வேலை செய்து பூர்த்தியாக்க மாட்டாரென்று கருதக்கிடக்கிறது.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கு இடையிலுள்ள கடலின் தூரம் 21 மைல்.
புகையிரத பாதை முற்றுப்பெற்றவுடன் பயணிகளை கொண்டு செல்வதற்காக இரண்டு புகைவள்ளங்கள் இங்கிலாந்தில் செய்யப்படுகின்றன
பாம்பன் கடலில் 40 அடி தூரத்திற்கு ஒரு ஸ்தம்பம் அமைக்கப்படுகிறது
அப்படி அமைக்கும் ஸ்தம்பங்கள் 136.
அப்பாலத்தின் மத்தியில் 200 அடி தூரத்திற்கு சங்கிலி பாலம் அமைக்கப்படும்.
இது மிக பிரயாசையான வேலையாதலால் இவைகளையமைத்துத்தீரா  ஒரு வருடம் செல்லுமாம்.
ஆதலால் 1912 ஆம் ஆண்டு ஆவணி மாசமே இலங்கையும் இந்தியாவும் இணைக்கப்படுமென நம்பப்படுகிறது      
இந்த செய்திதான் இலங்கை  தீவும் இந்திய பெருநிலப்பரப்பும் இணைத்து வீதி சமைக்க வெள்ளைக்காரன் சிந்தித்து செயலாற்றிய திட்டத்தின் ஆதாரம்  இதைத்தான் சிங்கள தீவினுக்கு ஓர் பாலமைப்போம் என்று பாரதி பாடினார் .
இதில் ஒன்றும் தீர்க்க தரிசனம் கிடையாது .. இது அவர் காலமாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்த செய்தி . ஆனாலும் இதை பாடிய பாரதியை பாராட்டுவோம்





கருத்துகள் இல்லை: