வியாழன், 22 செப்டம்பர், 2022

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள் ... தினமணி கட்டுரை -2007

 Gowra Rajasekaran  :  தினமணி கட்டுரை -2007 பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,
சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,
சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை, கிருஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,
1773 ஆம் ஆண்டு முதல் கிருஸ்தவ பிரிட்டிஷ் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,


கிருஸ்தவ வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.
1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,
கிருஸ்தவ வெள்ளையரால் வெளியிடப்பட்டது.
1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,
கிருஸ்தவ வெள்ளையரால் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் என்ற
பிராமணர்கள் மனுசாஸ்திர சட்டம் VII 374, 375),
கிருஸ்தவ வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.
ஒரு பிராமணன், காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.
ஆனால்,
அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,
அது பிணம் போன்றதே ஆகும். ( பிராமணர் மனுசாஸ்திர சட்டம்
IX 178). இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்,
கிருஸ்தவ வெள்ளையர்களே நீக்கினர்.
பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,
அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,
1817 ஆம் ஆண்டு கிருஸ்தவ பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே,
பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய
7 நாள்கள் கோவிலில்?
இருக்க வேண்டும் என்ற கொடுமை,
கிருஸ்தவ பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்
1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர சட்டத்தை,
1835 ஆம் ஆண்டு கிருஸ்த்தவரான Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,
சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,
1835-ல் கிரருஸ்தவ பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கிருஸ்தவ வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு கிருஸ்தவ பிரிட்டிஷ் அரசாங்கம்,
பிராமண மனுசாஸ்திர சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை: