ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

எலிசபெத் மகாராணி இறுதி நிகழ்வில் இந்திய இலங்கை ஜனாதிபதிகள் பங்கேற்பு . ரணில் விக்கிரமசிங்க -திரவுபதி முர்மு!

தினகரன்  : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பதவியேற்றபின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம்
கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி காலமான, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் மூலம் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த விமானம் துபாய் செல்வதோடு, அங்கிருந்து அவர்கள் லண்டனுக்கு பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேவில்  இடம்பெறவுள்ள, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை (20) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதோடு, ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளை இட்டு, துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் அன்றையதினம் இலங்கையில் துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அன்றையதினம் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலைமலர் : லண்டன்ல்: இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் ராணியின் உடலுக்கு அவரது 2வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கையை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: