திங்கள், 19 செப்டம்பர், 2022

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்...! அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினத்தந்தி : தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து 688 கோடி) மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட்டது. அப்பேட்டியில் ஜோ பைடன் கூறியதாவது:-
தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்.
உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தைவானை பாதுகாப்பார்கள் என்று உறுதியாக கூறினார்.

கருத்துகள் இல்லை: