ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

துணை நடிகை தீபா தற்கொலை: டைரியில் எழுதிவைத்த காதலன் யார்?

Divakar M | Samayam Tamil :  சென்னை, விருகம்பாக்கத்தில், சினிமா துணை நடிகை திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.
அவர் எழுதி வைத்த டைரியில், தன் காதலன் குறித்து எழுதி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் அமல நாதன். இவரது மகள் தீபா (எ)பவுவின் (29). இவர் வாழ்க்கை, துப்பறிவாளன், வாய்தா ஆகிய தமிழ் படங்களில், துணை நடிகையாக நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்காக, சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ,, செல்வரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பு, ஏ பிளாக்கில் தீபா வசித்து வந்தார்.இந்த நிலையில். இன்று காலை வீட்டில் தீபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து அருகில் வசிக்கும். நண்பர் பிரபாகரன் விரைந்து வந்தார். பின். சித்தூரில் உள்ள தீபா சகோதரர் ரமேஷ் மற்றும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தந்தார்.

போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வீட்டில் தீபா எழூதிவைத்த டைரி ஒன்றை கைப்பற்றினர். அதில் ''தனக்கு வாழ்கை பிடிக்கவில்லை. ஆதரவாக யாரும் இல்லை. நான் ஒருவரை உயிராய் காதலித்தேன். அவர் என் காதலை ஏற்கவில்லை. நான் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து தீபாவின் காதலன் யார் என விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 -ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: