ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நேற்று பஞ்சான்குளம்... இன்று நாயக்கனூர். வீடு வாடகைக்கு கொடுத்தால் குலதெய்வம் கோபிக்குமாம் .. வைரலாகும் வீடியோ!

Yesterday Panchankulam... Today Naikkanur... Video going viral!

நக்கீரன்  : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் எனும் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறி பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தீண்டாமை விதிக்கப்பட்டிருந்தது அனைத்து தரப்புகளிடமிருந்து கண்டனத்தை பெற்றது.
இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வாடகைக்கு தர முடியாது என பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று இதேபோல் மீண்டும் வைரலாகி வருகிறது.


 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டு உரிமையாளர் பெண் ஒருவர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தால் எங்கள் குலதெய்வத்திற்கு ஆகாது என தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது.
நாயக்கனூரைச் சேர்ந்த லட்சுமி என்பவரிடம் வீடு வாடகைக்கு கேட்டு ஒருவர் வந்த நிலையில், அந்த பெண் வீடு கேட்டு வந்தவரிடம் சமூகத்தை கேட்டு, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு வீட்டை கொடுக்க மாட்டோம். அப்படி கொடுத்தால் எங்கள் குல தெய்வத்திற்கு ஆகாது என கூறும் அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: