திங்கள், 19 செப்டம்பர், 2022

1962 தேர்தலில் திமுகவின் வளர்ச்சி . வரலாற்று செய்தி... யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை

 ஈழநாடு  யாழ்ப்பாணம்  - 7 -3 -1962
தமிழ்நாட்டை பொறுத்தவரை கிராம நகர பகுதிகள் பலமாக வாக்களிப்பு நடந்திருக்கிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் 44 வீத வாக்குகளை பெற்றது.
இம்முறை 46 சதவீத வாக்குகளை பெற்றும் அதன் பலம்  138 ஆக குறைந்திருக்கிறது.
 இதற்கு மாறாக 1957ஆம் ஆண்டு 14 சதவீத வாக்குகளை பெற்ற திமுக  இம்முறை 27 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதாவது 100 சதவீத அதிகரிப்பு .
1957 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 117 அபேட்சகர்களை நிறுத்தியதால் 15 ஸ்தானங்கள் அதற்கு கிடைத்தது
இம்முறை அது நிறுத்திய 142 அபேட்சகர்களில் 50 பேர் வெற்றி பெற்றதனால் கட்சியின் பலம் வெகுவாக அதிகரித்துள்ளது .
கருணாநிதி ஒருவரை தவிர அத்தனை அங்கத்தவர்களுக்கும் புதிதாக சட்டசபைக்கு வந்தவர்கள் .
சுதந்திரா கட்சி நிறுத்திய 94 அபேட்சகர்களில் 6 பேரே வெற்றி பெற்றனர்
சுதந்திரா கட்சி சென்னையில் படுதோல்வி அடைந்தது
திராவிட முன்னேற்ற கழகத்தின் பல பெருக்கம் டில்லியிலும்  சென்னையிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு ஜீவாதாரா பிரச்னையை சிருஷ்டித்து உள்ளது
திமுகவின் முக்கிய கிளர்ச்சி ,வடநாட்டில் ஆதிக்கத்தில் இருந்து மீள தென்னாட்டை தனியாக பிரிப்பதே ஆகும்.
இதை சமாளிக்கும் வழி என்ன என்பதே காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள  பிரச்சனையாகும் 

கருத்துகள் இல்லை: