புதன், 5 ஜனவரி, 2022

குளிர்காலத்தில் உதிரும் கூந்தல்.. கலைஞர் டிவியில் என்ன நடக்கிறது?

 Panimalar Panneerselvam  :  Them: என்னங்க 2021 ல எல்லாமே நல்லாதான் நடந்த மாதிரி சொல்றீங்க, எதுவுமே கெட்டதா நடக்கலயா?
Me: நடந்துச்சு, நடந்துகிட்டாங்க. எப்பயும்போல என் பின்னாடி பேசுறது, போட்டுக்குடுக்குறது, கேரக்டர் அசாசினேஷன் பண்றது, கூட இருந்தே குழி பறிக்குறது, அஃபிசியல் போன் நம்பர தப்பான குரூப்ல பரப்பிவிட்டது, வேலை செய்யும்போது சேலை விலகுன வீடியோவ ட்ரெண்ட் ஆக்கிவிட்டது, ஆன்லைன் புல்லியிங், பாதிக்கப்பட்ட நம்மலயே குத்தம் சொன்னது, ஏன் கடைசியா வேலையவிட்டு தூக்கிட்டாங்கனு கதை கட்டிவிட்டதுனு நிறைய நிறைய நிறைய….
Them: அப்ப அதப்பத்தி அவுங்களப் பத்தி ஏன் எழுதல?
Me: ஏன்னா அவுங்களுக்கெல்லாம் குளிர்காலத்தில் உதிரும் என் கூந்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்கூட கொடுக்கல.
Just ignore negativity, move oசெல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் டிவியின் திருமாவேலன்  முன்பு விகடன் குழுமத்தில் பணியாற்றினார்.
அந்த காலங்ககளில் கலைஞரையும் திமுகவையும் பற்றி இவர் வகை தொகை இல்லாமல் மோசமாக விமர்சித்தார் தரம் தாழ்ந்தும் விமர்சித்தார் .. கருணாநிதி என்றே கலைஞரை விழிப்பார்
இன்னும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் , ஈழம் போன்ற விடயங்களில் திமுகவையும் கலைஞரையும் பற்றி வேறு எவரையும் விட அதிகமாக தொழிலாற்றியது இவர்தான்
அடுத்து வரவனை செந்தில் என்பவர் கூட திமுகவை நக்கலடித்து காணொளிகளில் பேசியவர்தான்
இப்போதும் கூட இவர்களின் பிரசாரங்கள் கூலிக்கு மாரடிக்கும் ஜால்றா வகையை சார்ந்துதான் இருக்கிறது
சன்டிவியா கலைஞர் டிவியா திமுகவுக்கு அதிகம் கேடு விளைவிப்பது என்று பட்டிமன்றமே வைக்கலாம் .
அவ்வளவு தூரம் இவை செயல்படுகின்றன.
அதிலும் சன்டிவி பார்ப்பனியத்திற்கு செய்யும் சேவை அளப்பெரியது
பனிமலர் பன்னீர்செல்வம் போன்ற திராவிட கருத்தியலாளர்களால் கலைஞர் டிவியில் தாக்கு பிடிக்க முடியவில்லை என்றால் அது பற்றி சம்பந்த பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்   அந்த நம்பிக்கை அதிகமாக இல்லை .. 

கருத்துகள் இல்லை: