புதன், 5 ஜனவரி, 2022

பஞ்சாபில் பிரதமர் மோடி : "உயிருடன் திரும்பியிருக்கிறேன்..முதல்வருக்கு நன்றி சொன்னேன் எனச் சொல்லிவிடுங்கள்" - பஞ்சாப் அதிகாரிகளிடம்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  பிரதமர் நரேந்திர மோடி, இன்று பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்தநிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி, வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்துள்ளனர். இதன்காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் மோடி சிக்கிக்கொண்டார். பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலயத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்தநிலையில் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம், "பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பியிருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் எனச் சொல்லிவிடுங்கள்" எனக் கூறியுள்ளா


கருத்துகள் இல்லை: