மாலைமலர் : தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம்தேதி தமிழகம் வர இருக்கிறார். மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மோடி பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக