Rayar A - Oneindia Tamil : டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் உயிரை விட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் தொடர்ந்து எதிப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட் மசோதாவை தமிழக ஆளுநர் இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் முகாம் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் முகாம் இது தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நீட் தேர்வு மசோதா 100 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நேரில் வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சி எம்,பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஆனால் 9 நாட்களாகியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்கவில்லை. நிறைய பணிகள் இருப்ப தால் அமித் ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்க முடியாத நிலை உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியது.
ஆனால் அரசியல் காரணமாகத்தான் அவர் சந்திக்க மறுப்பதாக தமிழக கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
ஆளுநர் பதவி விலக வேண்டும்.. இந்த நிலையில் அமித்ஷா இன்றும் தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று திமுக எம்பி டி .ஆர்.பாலு கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் பேட்டியளித்த திமுக எம்பி டி .ஆர்.பாலு கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் ஒட்டுமொத்த பொறுப்பும் ஆளுநர்தான். நீட் மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் காரணம். அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நீட் மசோதாவை ஒன்றிய அரசுக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை.
அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஆளுநர் அதனை குழிதோண்டி புதைத்து வருகிறார்.
அமித்ஷா செய்வது நியாயமல்ல அமித்ஷா செய்வது நியாயமல்ல எனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது
அமித்ஷா அரசியல் காரணமாக சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன் நீட் தேர்வு விலக்கு குறித்து மீண்டும் உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டி .ஆர்.பாலு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக