Aneesh Jasy ST : Aneesh Jasy ST : குத்தகை நாத்திகர்கள்
1) இடதுசாரி கட்சிகளும், இஸ்லாமிய வாதிகளும் , மற்றும் மதவாதிகளும் நாத்திகத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
2) இவர்கள் சொல்லும் எதுவும் சரி என்று நாத்திகர்களும் சொல்ல வேண்டும்...
3) இவர்கள் பேசுவதை தான் நாத்திகர்களும் பேச வேண்டும்.
4) இவர்கள் ஆதரிப்பதுதான் நாத்திகர்களும் ஆதரிக்கவேண்டும்.
5) சுயசிந்தனை நாத்திகர்களுக்கு இருக்கக்கூடாது. எப்படி, என்ன சிந்திக்க வேண்டும் என்பது இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
6) இவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு நாத்திகர்கள் :- மிச்சர் தின்னு கொண்டு இருக்கவும், ஆமீன் ஆமீன் என்று கூடக் கூட சொல்லிக் கொண்டே இருக்கவும்.., கோஷம் போட்டுக் கொள்ளவும் , சரணம் பாடவும், ஜங் ஜங் என்று கூடக்கூட அடிக்கவும், இப்படித்தான் ஆடு மந்தை போல் நாத்திகர்களை தமிழகத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்...
7) இதையும் மீறி ஏதாவது நாத்திகர்கள் பேசிவிட்டால் அவனை இவர்கள் ஏதாவது ஒரு கிணற்றில் தள்ளி விடுவார்கள். ( சங்கி, RSS கைக்கூலி , corporate கைக்கூலி, முதலாளித்துவ வாதி, வலதுசாரி, பார்ப்பனிய கைக்கூலி. etc... )
😎 இஸ்லாமையும், இஸ்லாமிய வாதிகளையும் விமர்சிக்கும்போது முஸ்லிம்களை விமர்சிக்கிறீர்கள் என்றும் திசை திரும்புகிறார்கள்...
9) ஒரு நாத்திகன் (Atheist) செயல்களில் முக்கிய பங்கு வகிப்பது சுதந்திர சிந்தனை ( Freethinking or Freethought ) தான் ஆனால் இது தமிழகத்தில் சேர்ந்த பல நாத்திகர்கள் சிறிது கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. ( பயன்படுத்த விடுவதுமில்லை )
Aneesh Atheism ExMuslim
Rishvin Ismath : தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவில் ஒருவர் 'உண்மையான' நாத்தீகரா, இல்லையா என்பதை தீர்மானிப்பது அவர் இஸ்லாத்தை விமர்சிக்கின்றாரா, இல்லை இஸ்லாத்திற்கு சொம்பு தூக்குகின்றாரா என்பதை வைத்துத்தான் என்கின்ற நிலைமையை உருவாக்கி விட்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விமர்சிக்காமல் இந்து மதத்தையும், கிறிஸ்தவத்தையும் விமர்சித்தால் மட்டுமே அவர் 'உண்மையான' நாத்தீகர்,
இஸ்லாத்தை விமர்சித்து விட்டால் "ஐயோ அய்யோ இவன் RSS கைக்கூலி....................." என்று தொப்பி போட்டுக் கொண்டு ஒப்பாரி வைப்பார்கள்.
(மகிழ்ச்சியான செய்து : அரசியல் சாராத அறிவுசார் நாத்தீகத்தின் அறிமுகம் காரணமாக இந்த நிலைமை மாறி வருகின்றது. அறிவுசார் நாத்தீகம் இஸ்லாமியவாதிகளுக்கும், ஜிஹாதிகளுக்கும் மிகப் பெரிய தலையிடியாக மாறிவிட்டிருக்கின்றது. தினமும் தவறாமல் கதறுகின்றார்கள். கதறுவது கூட பரவாயில்லை, "அல்லாஹு அக்பர்" செய்யாமல் இருக்கும் வரை சரிதான்.)
புகச்சோவ் : இது திமுகவால் வீழ்ந்தோம் கோஷ்டியோட வயித்தெரிச்சல் பதிவு.
திராவிட கொள்கையே மூடநம்பிக்கையிலிருந்து மக்களை மீட்பதுதான்.
அதனாலங்கே, பகுத்தறிவும் நாத்திகமும் தூக்கலாத்தான் இருக்கும்.
இவனுங்க இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் பேர்வழின்னு இந்துத்வாவை தூக்கிப்பிடிப்பான். இல்லேன்னா, இஸ்லாமை எதிர்க்கிறேன்னு சொல்லிட்டு, இஸ்லாமியருக்கு சீட்குடுக்கலேன்னு கதறுவான், பாபர் மசூதியை இடிச்சது தவறுன்னு சொல்லுவான்! ஆனால் இரண்டு மதவாதிகள் மோதிக்கிட்டு நாசமாப்போறான் நமக்கென்னான்னு இருக்கமாட்டான்.
திமுக சிறுபான்மையை ஆதரிக்க கடமையிருக்கு. நாத்திகனுக்கு அந்த கடமை ஏதுமில்லை. ஆனால், ஒவைசிக்கு முகநூல்ல பிரச்சாரம் பண்ணுவான். பெரியாரை குறைசொல்லுவான், அண்ணாவை குறைசொல்லுவான், கலைஞரை திட்டுவான். இதுக்கு திமுககாரன் பதிலடி குடுத்தா! இதேமாதிரி புரளிய கெழப்புவான்.
நிறைய பாத்தாச்சி.
தோழர் ஜின்னா மச்சு தவிர, எந்த இஸ்லாமிய நாத்திகனும் உண்மையானவன் கிடையாது. பூரா வெளிவேஷம்தான்.
மதசீர்திருத்தத்திற்காக எழுதுறவனுக்கும், உண்மையான நாத்திகனுக்கும் நிறைய வித்யாசமுண்டுப்போய்.....👍
ஆனால், பயங்கரமா எழுதுவானுக..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக