Arivalagan G. : இயக்குனர் மணிவண்ணன் பாணி என்றோர் குப்பைப் போக்கு சினிமாவில் இருந்தது .
அது தன்னை அதிதீவிர அறிவுஜீவிப் புண்ணாக்காக காட்டிக்கொண்டு
விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில்
எது தமிழர்களுக்கு இருப்பதில் சிறந்த நன்மையைக் கொடுத்ததோ அந்த அரசியலை இடைவிடாது நக்கல் நையாண்டி செய்துகொண்டு இருப்பது .
இத்தனைக்கும் தனது சினிமாவில் இருப்பதில் மோசமான சாதி மேட்டிமை பெண்ணடிமைத்தனம் பிற்போக்குத்தனம் இவைகளை விடாமல் தொடர்ந்து கொண்டே ... திராவிட இயக்கத்தின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு திமுகவை தொடர்ந்து நக்கல் செய்து கொண்டிருப்பதை அந்த நபர் கடைசிவரை செய்தார் .
அதன் மூலம் தன்னை அதிதீவிர கொள்கையாளனைப் போலவும் காட்டிக் கொண்டார் .
ஆக கடைசியில் எது சிறந்தது என்பதை சொல்லவும் தனக்கான தனி அரசியல் கொள்கையை சொல்லவும் செயல்படுத்தவும் செய்யமுடியாமல் ஒரு (காரியக் )கோமாளியாக மறைந்தும் போனார்.
தனக்கு அரசியல் ஓரளவு தெரியும் என்பதாலும் தனக்கென ஒரு ஆதரவு தளம் இருப்பதால் வீண் நக்கல் நையாண்டியில் சமூகத்துக்கு தன்னாலான குத்து மண்ணை அள்ளிப்போட்டார் .
இது அப்படியே சோ ராமசாமி பாணி தான். ஆனால் சோ ராமசாமி தனது சமூகத்துக்கு உண்மையாக தனது எதிரிகளான திராவிட அரசியலை வீழ்த்த அதைச் செய்தார்.
அரியவகை ஏழைக்கு பையித்தியம் பிடித்தால் வீதியில் உள்ளதை தன் வீட்டுக்குள் எறிவான் என்றும், நமது ஆட்களுக்கு பையித்தியம் பிடித்தால் தனது வீட்டில் உள்ளதை தூக்கி வீதியில் எறிவார்கள் என்றும் சும்மாவா சொன்னார்கள்.
தோழர் சாந்தி நாராயணன் பதிவு.
கடைசியில் சைமன் படத்தில் எல்லாம் "கொள்கை" பேசினார்😄.
மணிவண்ணன் செய்தது புரோக்கர் PhsyCology. எது உயர்வானதோ (விலை/தரம்) அதை குறைக்க , மட்டம் தட்டும் யுக்தி.
நுனி மரவெட்டி மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக