நக்கீரன் செய்திப்பிரிவு : கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 4,862-ல் இருந்து 6,983 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 6,939 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 6,983 ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 3,759 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், செங்கல்பட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 816 ஆகவும், திருவள்ளூரில் 444 ஆகவும், கோவையில் 309 ஆகவும், வேலூரில் 223 ஆகவும், காஞ்சிபுரத்தில் 185 ஆகவும், தூத்துக்குடியில் 132 ஆகவும் திருச்சியில் 123 ஆகவும் சேலத்தில் 92 ஆகவும் உயர்ந்துள்ளது.
வெள்ளி, 7 ஜனவரி, 2022
தமிழ்நாட்டில் 7,000- ஐ நெருங்கியது கரோனா பாதிப்பு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக