திங்கள், 3 ஜனவரி, 2022

சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!

 Rayar A -  Oneindia Tamil :  சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் எழுந்தன.
பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.


அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இரவும் பகலும் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காலில் பேசிய பிறகுதான் பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சாட்டை துரைமுருகன் கைது - இந்த சம்பவம் தொடர்பாகச் யுடியூபர் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்ரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. ' பெண்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்' என்றும் அவர் தொடர்ச்சியாக ட்வீட் போட்டதாக தெரிகிறது.

 குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு - இதனை தொடர்ந்து ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது. இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் யுடியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்


கருத்துகள் இல்லை: