வியாழன், 6 ஜனவரி, 2022

கோயம்புத்தூர் முன்னாள் முஸ்லிம் ஜனநாயக செயற்பாட்டாளர் தோழர் அனீஷ் கைது! பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள்?

  Rishvin Ismath   : கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் செயற்பாட்டாளரான தோழர் அனீஷ் அவர்கள் 29.12.2021 அன்று கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் போலீசார் சுயமாக மேற்கொண்டதாக சித்தரிக்கப்படும் இந்தக் கைதின் பின்னணியில் இஸ்லாமியவாதிகள் இருக்கலாம் என்பதை இலகுவாக ஊகிக்க முடியுமாக உள்ளது.
முற்போக்குவாத முகமூடி அணிந்து கொண்டு முன்னாள் முஸ்லிம்கள் மீது மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தொடர்ந்தும் வன்மத்தைக் கக்கிவரும் ஆஷிக் அலி எனும் இயற்பெயர் கொண்ட ஆஷிக் மாறன்.
 என்ற பெயரில் சமூக ஊடகங்களில் உலவி வரும் தீவிர இஸ்லாமியவாதி.
 கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தோழர் அனீஷை சிறைக்கு அனுப்பிக் காட்டுவதாக பகிரங்கமாக அச்சுறுத்தி இருந்தான்.
அந்த அச்சுறுத்தலின் பின்னணியில் அனீஷ் பகிர்ந்து இருந்த மீம்ஸ் சிலவற்றைக் காரணமாகக் காட்டி இந்த அநீதியான கைது இடம்பெற்றுள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தோழர் பாரூக் கொலை செய்யப்பட கோயம்புத்தூரிலே இந்தக் கைதும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஓர் முன்னாள் முஸ்லிம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்,
இஸ்லாமியவாதிகளின் தூண்டுதலினால் மேற்கொள்ளப் பட்ட இந்தக் கைதின் மூலம் தோழர் அனீஷ் அவர்களின் வாழ்வு ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
.
.ஐஸ்ஐஸ் இன் இஸ்லாமிய தேசம் மற்றும் ஏனைய இஸ்லாமிய கடும்போக்குவாத தேசங்களில் காணப்படுவது போன்று இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கான மதநிந்தனைச் சட்டங்களை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பயன்படுத்தி முன்னாள் முஸ்லிம்களின் குரலை நசுக்க இஸ்லாமியவாதிகள் முயன்று இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு பெரும் இழுக்கு ஆகும். ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் கட்டாயமாக மதிக்கப்படல் வேண்டும். ஏனைய மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் போல இஸ்லாமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. இஸ்லாம் விமர்சிக்கப் படுவதை தடுப்பதற்காக இஸ்லாமிய தீவிரவாத பாலைவனச் சட்டங்களை இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்த இஸ்லாமியவாதிகளுக்கு இடம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.
.
.பெரியாரால் இந்துமதமும், சனாதன தர்மமும் தீவிரமாக விமர்சிக்கப்பட்ட தமிழகத்தில் இஸ்லாத்தை விமர்சித்தால் கொலை செய்வதும், சிறைக்கு அனுப்புவதும் நிகழ்கின்றன என்பது தமிழகத்திற்கு மிகப்பெரும் அவமானம் ஆகும். ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதிப்பவர்கள், முற்போக்கு சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தோழர் அனீஷ் உடைய விடுதலைக்காக முயற்சி செய்ய, குரல் கொடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், அதன் அச்சுறுத்தல்களுக்கும் ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் அடிபணியக் கூடாது. இந்திய அரசும், தமிழக அரசும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு முன் தலை குனியக் கூடாது.
#FreeAneesh
#ReleaseAneesh
#saynotoislamists
#FreedomOfExpression
#SayNoToIslamicTerrorism

கருத்துகள் இல்லை: