Tp Jayaraman :
இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல் லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 8.8கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட் டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க பாதை 2010ஆவது ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது யு.பி. ஏ அரசின் ( தலைவராக- CHAIR PERSON) இருந்த சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அப்போது ஏ.கே ஆண்டோனி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.இமாச்சல பிரதேச முதலமைச்சர் பிரேம்குமார் துமால், எதிர்க்கட்சி தலைவர் திருமதி வித்யா ஸ்டோக்ஸ் மற்றும் சில உயர் ராணுவ அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த சுரங்க பாதை பணிகள் தற்போது முடிந்துவிட்டன. ஆனால் இந்த சுரங்க பாதையை அமைக்கவேண்டும் என்று வாஜ்பாயிதான் முதலில் அவருடைய மனதில் நினைத்தார் என்றும் அதனால் அவருடைய பெயர்தான் இந்த சுரங்க பாதைக்கு வைக்க வேண்டும் என்று நரேந்திர மோடி உத்தரவிட்டதன் பேரில் இந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்க பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.. ெய்தது ஒருவர் பெயர் வாங்கிக் கொள்வது ஒருவர்...இந்த பொழப்புக்க
Sheik Uduman : · உலகத்திலேயே மிக நீண்ட குகை உள்ள சாலை வழி நார்வேயில் உள்ள ளேறடால் குகை பாதைதான் இது ஏறக்குறைய 25 கிலோமீட்டர் நீளம்
உள்ள வழித்தடம் ஆகும் . ஆனால் நம்ம நாட்டு ஒட்டுமொத்த ஊடகங்களும் இன்று மத்திய பிரதேசத்தில் திறக்கப்பட்ட வெறும் 10 கிலோமீட்டர் நீளம் மட்டுமே உள்ள அடல் சுரக்க பாதையைத்தான் உலகத்திலேயே நீண்ட குகை வழிசாலைன்னு ???கூவிகிட்டு இருக்காங்க ஒன்னும் புரியல 😊,ஒரு வேல ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களுக்கும் உலக அறிவு இல்லையா ? இல்ல எனக்குதான் அறிவு இல்லையா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக