திங்கள், 28 செப்டம்பர், 2020
நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல் போதைப்பொருள் வழக்கு... தீபிகா படுகோனே, சாரா அலிகான்,ஷ்ரத்தா கபூர் ...
Chinniah Kasi : ·
போதைப்பொருள் வழக்கு... நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல்
மும்பை:
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகில் போதைப்பொருள் விவகாரம்விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொரு ளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கைதுசெய்யப் பட்டார் இந்த வழக்கில் திரையுலகை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான்,ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணைக்குப் பிறகு தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா மற்றும்சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர். அதில் உள்ள வாட்ஸ் அப்உரையாடல்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக