இவ்வாறு பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் விழித்துக் கொள்வதையும் தவிர்க்கும் அளவுக்கு மோதல் முற்றியிருப்பதை பற்றி திமுக தலைமை கழகத்திலும் விவாதம் நடந்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் சில முக்கிய நிர்வாகிகளுடன் இது பற்றி ஆலோசித்திருக்கிறார். அப்போது... ‘அதிமுகவில் இந்தச் சண்டை இப்போது ஓயப் போவதில்லை. சசிகலா வந்தவுடன் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகும் என்று நினைத்தோம். ஆனால் அதற்குள்ளாகவே அதிமுகவில் பெரிய அளவு மோதல் ஏற்பட்டு விட்டது. எனவே இது திமுகவுக்கு தான் சாதகமாகும்.
இந்த நிலையில் நம் வெற்றி முன்பை விட எளிதாகவே கிடைக்கும். அதிமுக கட்சி யாரிடம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி எடுத்த சர்வே ஒன்று நம் கைக்கு வந்துள்ளது. அதன்படி தற்போதைய நிலைமையில் அதிமுக நிர்வாகிகள் 89% எடப்பாடி பழனிச்சாமியிடமும் 8% சசிகலா பக்கமும் 3% பன்னீர் பக்கமும் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது ‘ என திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளிடம் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுகவுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்த ஸ்டாலின் அடுத்து கூறிய தகவல்கள் தான் திமுக தலைமை கழக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
’அதிமுக வரும் தேர்தலில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது. உட்கட்சி மோதல் அங்கே கடுமையாக உள்ளது. அதேநேரம் திமுக பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வெற்றி பெறுவோம் என்ற சூழல் உள்ளது.
ஏற்கனவே திமுகவில் நிதி நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமது பல வேட்பாளர்களுக்கு நிதி உதவி செய்ய முடியாமல் தலைமை இருந்தது உங்களுக்கே தெரியும். அன்று தேர்தல் செலவுக்காக நாம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. திமுகவுக்கு உதவ முன்வரும் தொழிலதிபர்களையும் மத்திய அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் தலைமை சார்பில் பணம் கொடுப்பது என்ற பேச்சு இல்லை. அவரவர்கள்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும்’ என்று ஸ்டாலின் சொல்லும் போது திமுக முக்கிய நிர்வாகிகள் அதிர்ந்துவிட்டனர்,
எடப்பாடி வரும் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்கப் போகிறார், இந்த நிலையில் திமுக வெறுங்கையோடு தேர்தலை எதிர்கொள்ள முடியாது. அதனால தலைமையை நம்பிக்கிட்டு இருக்காதீங்க. உங்க செலவு உங்க கையிலதான் என்று தலைமைக் கழக நிர்வாகிகள் தங்களை சந்திக்கும் மாவட்டச் செயலாளர்களிடம் கூறி வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக