செவ்வாய், 29 செப்டம்பர், 2020
Flashback பன்னீர்செல்வத்தின் .. சேகர் ரெட்டி வீட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது 8 டிசம்பர், 2016 Flashback
ராஜா. nakkheeran. : வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து நடக்கிறது. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.tamiloneindia.com
முதல்வரின் நண்பர் வீட்டில் ரெய்டு (படங்கள்) தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின் நண்பரும், திருப்பதி – திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள வீடு, விஐடி பல்கலைக்கழகம் எதிரேயுள்ள மற்றொரு வீடு, அலுவலகம் என வேலூரில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் டெல்லியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் 30 பேர் இந்த ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. -ராஜா. nakkheeran.i
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக