
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில்
30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரெயில் மறியல்
போராட்டத்தை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாள் ரெயில்
மறியல் போராட்டத்துக்கு மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில்
அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில்
அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும்
கண்டன கோஷங்களை எழுப்பினர். அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் தங்களின்
எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நேற்றுடன் முடிவதாக இருந்த இந்த ரெயில் மறியல் போராட்டத்தை
மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி
அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மாநிலம்
முழுவதும் ரெயில் சேவைகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக