கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 94,200 பேருக்கு கோவிட் பரிசோதனைகள் நடந்துள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,88,043 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்றைய நாளில் 10656 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இதுவரை 1,63,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4981 தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சையிலும் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 9313 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,706 பேர் குணமாகியுள்ள நிலையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 46,341 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக