காந்தி ஒரு புத்திசாலி .. இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரும் தந்திரவாதி . பலசமயங்களில் அவர் ஒரு நரித்தந்திரவாதி .
அவருக்கு இந்தியாவை ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக வைத்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக தெரிந்திருக்கிறது . அதற்கு காரணம் அவர் இங்கிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்து பெற்ற அனுபவங்கள்தான் .
இங்கிலாந்து ஆட்சியாளர்களின் உள்மன ஓட்டத்தை அவர் புரிந்தே வைத்திருந்தார் .
ஜேர்மனி ஜப்பான் ரஷியா ஆகிய நாடுகளின் பலமும் அவற்றினால் இங்கிலாந்து மெல்ல மெல்ல ஆட்டம் கண்டு கொண்டதை காந்தி மிக எளிதாகவே அறிந்திருந்தார் . காந்திக்கு இந்திய சுதந்திரம் பற்றி சந்தேகமே கிடையாது .
காந்தியை மிகவும் துன்புறுத்திய விடயம் ஜாதிதான் .
சுதந்திர இந்தியாவில் காந்தி நம்பும் பகவத் கீதையின் ஜாதீய சனாதனம் அழிந்து போய்விடுமே என்று உண்மையாகவே கவலைப்பட்டார் .
ஒரு அசல் ஜாதிய பயங்கரவாதி எப்படி சிந்திப்பாரோ அப்படியே காந்தியும் சிந்தித்தார் . அவருக்கு ஜாதி கட்டமைப்பை பாதுகாத்து வருங்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருந்தது .
அதற்காக எதுவும் செய்ய தயாராக இருந்தார். இந்த அதி தீவிரவாதத்தை தியாகம் என்று கருதி எல்லோரும் ஏமாந்து விட்டார்கள். இப்போதும் ஏமாறுகிறார்கள்.
ஒரு fanatic இன் அழுங்கு பிடிவாதத்தை தியாகம் உறுதி ஒழுக்கம் என்றெல்லாம் வழமை போல உலகம் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது.
காந்தி எந்த காலத்திலும் ஜாதி அடியோடு ஒழியவேண்டும் என்று கூறியதே இல்லையே?
அது மட்டுமல்ல ஜாதி அமைப்பு தொடரவேண்டும் என்று அதற்காகவே ஹரிஜன் என்ற சொல்லை கண்டு பிடித்தார்.
ஜாதி பெயர்கள் எல்லாமே ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு உள்ளான வார்த்தைகளாக இருந்தன . இந்த சொற்களின் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்த கோபம் இந்த ஜாதி அமைப்பை தகர்த்துவிடும் என்பதை காந்தி கண்டு கொண்டார் . அவர் புத்திசாலி அல்லவா?
எனவே அந்த சொற்களை அப்புறப்படுத்துவதன் மூலம் அவர்களின் கோபத்தை நீர்த்து போகச்செய்ய முடியும் என்று முடிவெடுத்தார்
அவர்களை வெறும் சொற்சிலம்பத்தால் மட்டுமே ஏமாற்றி விடமுடியும் என்று நம்பி (கடவுளின் குழந்தைகள்) ஹரிஜன் என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார்.
எவ்வளவு கேவலமான பொய் இது . எவ்வளவுதூரம் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றிய நரியல்லவா காந்தி?
இது ஒரு சிறு உதாரணம்தான்
உண்ணாவிரதத்தை கொடிய ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்று கண்டுகொண்ட நரித்திரவாதி காந்தி.
கருத்தை கருத்தால் அணுகவேண்டும் தவிர வேறு ஆயுதம் கொண்டு அதை அணுகுவது கயமையாகும் .
அதிலும் காந்தியின் பூனா உண்ணாவிரதத்தில் காந்தி இறந்தால் மக்கள் வெகுண்டெழுந்து தாழ்த்தப்பட்ட மக்களை உயிரோடு கொழுத்தி விடுவார்கள் என்று அம்பேத்காரை பயமுறுத்திதான் வெற்றி கண்டார் .
இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இது அஹிம்சை அல்ல கொடூரமான பிளாக் மெயில் .. உயிர்களோடு விளையாடிய பயங்கரவாதமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக