பெரியாரிய கொள்கைத் தோழர்களுக்கு இவரைத் தெரியாதவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். இவர் வாழ்வில் செய்த மாபெரும் தவறு தனக்குப் பிறந்த 40 நாளே வயது கொண்ட பிஞ்சுக் குழந்தையை தூக்கிக் கொண்டு தமது பெரும் பாட்டன் பெரியாரைக்காட்ட வேப்பேரியில் எண் 50, ஈவெகி சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலுக்குள் நுழைந்ததுதான்.
காலை மணி 10:30 இருக்கும் அந்த பிஞ்சை தூக்கிக் கொண்டு இணையர்கள் உள்ளே சென்று பெரியார் சமாதி மேல் குழந்தையை கிடத்திவிட்டு நிழற்படம் எடுக்க தயாரானார்கள்.
குழந்தை அழுததால் தோழர் திண்டின் மீது அமர்ந்து பால் கொடுத்துக் கொண்டிருந்தார் சற்றுநேரத்தில் செக்யூரிட்டி வந்து மேலே உட்காரக் கூடாது என்று சத்தம் போட்டுவிட்டு சென்று விட்டார். கொஞ்ச நேரத்தில் சீத்தாராமன் என்ற நபர் (திடல் மேலாளர்) வந்து யார் பா நீங்க என்று தொடங்கி ஒரு மாதிரியான மொழி நடையில் கத்த ஆரம்பித்தார். உடன் வந்திருந்த தோழர் கமலாதேவி ஏன் கத்துறிங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க நாங்களும் அடிக்கடி திடலுக்கு வந்து போற பெரியாரிஸ்ட்டுகதான் என்று கூற .தோழர் ரீகன் " ஏங்க இவ்ளோ கத்துறீங்களே... காலைல ஏழு மணிக்கெல்லாம் அந்த சமாதிய சுத்தம் பண்ணி வைக்க மாட்டீங்களா?" என கேட்டார்
அதற்கு ஆத்திரமடைந்த சீத்தாராமன் "டேய் புடுங்கி... நீ என்ன மயிரா நீ என்னடா கேக்குறது?" என்றார்
"என்னங்க இப்டி பேசுறீங்க? திடலுக்குள்ள இப்டி ஒரு அநாகரீகமான ஆளா? இதை பற்றி ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு போகணும்"னு சொல்ல , அதற்கு "நான் தான்டா இங்க manager, உன்னால் ஒன்னும் பண்ண முடியாதுடா... ஏய்... நம்ம ஆளுங்களை எல்லாம் கூப்பிடுங்க..." என்று கத்தினார் சீதாராமன்
சற்று நேரத்தில் அங்கு வந்த தோழர் பிரின்ஸ் இடம் இதை முறையிட்டனர்.
அவர் தாம் நம்மை மேலும் வியப்புக்குள்ளாக்கி தான் ஒரு பெரியாரை தாண்டி சிந்திக்கக் கூடிய தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதை நிரூபித்துவிட்டார் .
தோழர் பிரின்ஸ் கொடுத்த விளக்கங்கள் என்ன தெரியுமா?
தோழர்.ரீகனையோ அவரது இணையரையோ, தோழர் கமலா தேவி அவர்களையோ அவர்களுக்கு யாரென்று தெரியாதாம்...
அவர்கள் ஒருவேளை RSS காரர்களாக இருந்தால் என்ன செய்வது?
அதனால் அவர் பேசிய வார்த்தைகள் சரியானது தான்.
நாம் கேட்கிறோம்:
எங்களை, எங்கள் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் உங்களை போன்ற பெரிய நிறுவனத்தார்களுக்கு யாரென்றே தெரியாது தான்.
ஆனால் ஒரு மனிதன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திடலுக்கு வந்து, கிழவன் சமாதிக்கு சென்று வருகிறான், அங்கிருக்கும் நூலகத்தில் நேரம் செலவிடுகிறான்... உங்கள் கூற்றுபடி அவனை இதுவரை நீங்கள் அறிந்திருக்கவே இல்லை என்றால்... நாளை உண்மையிலே ஒரு RSS காரன் உள்ளே வந்தால் நீங்க எப்படி கண்டுபிடிப்பீங்க?
புதிதாக பெரியாரை அறிந்து கொள்ள ஒருத்தன் திடலுக்கு வந்தா, அவனுக்கு வழிகாட்ட அங்க எதாவது ஏற்பாடு உண்டா? யாராவது அதை செய்ய முன்வந்தால் அமைப்பை விட்டு நீக்குவீங்க.... இது தானே உங்கள் நியாயம்.
திடலுக்கு நம் கோரிக்கை :
ஆசிரியர் இதில் தலையிட்டு இது தொடர்பாக விசாரணை செய்து சம்மந்தப்பட்ட நபராகிய சீத்தாராமன் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.
தோழர்.ரீகனுக்கு நாம் சொல்ல விரும்புவது
பெரியார் என்பவர் திடலிருந்து வெளியேறி மக்களோடு கலந்துவிட்டார் இது தெரியாமல் நீங்கள் அங்கே போய் தேடலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக