Velmurugan P -
tamil.oneindia.com/ : கிருஷ்ணகிரி: 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம்
செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய பள்ளி சிறுவர்கள் 3
பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் கிராமத்தை
சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரது 15 வயது மகள், சென்னசந்திரம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அதே பள்ளியில் படித்து 11ம் வகுப்பு படித்து வரும்
பேட்டப்பனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியை
காதலித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இதை நம்பிய அந்த சிறுமி கடந்த மாதம் 5ம் தேதி, பேட்டப்பனூர் அருகில் உள்ள
மார்கண்டேயன் நதி கரைக்கு, சிறுவன் அழைத்ததன் பேரில் சென்றுள்ளார். அப்போது
அங்கு வந்த அந்த சிறுவனின் நண்பனான, அதே ஊரை சேர்ந்த, வேப்பனஹள்ளி அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன்
வந்துள்ளான். இவர்கள் இருவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர். அத்துடன் அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.3 சிறுவர்கள் கைது
உடனடியாக அந்த சிறுமியை சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி
வைத்துவிட்டு, அந்த சிறுமியின் தந்தை, இது குறித்து குருபரப்பள்ளி போலீசில்
புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு
பதிவு செய்து, அந்த 3 சிறுவர்களையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
படிக்கும் வயதில் காதலில் ஈடுபட்டு எல்லை மீறி, அதை சமூக வலைதளங்களில்
பரப்பும் அளவுக்கு வளர் இளம் சிறுவர்கள் மாறியிருப்பது சமுதாய சீர்கேடு
ஆகும். இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதை சொல்லி வளர்க்க வேண்டும்
என்பதை போல், ஆண் குழந்தைகளுக்கு எதை செய்யக்கூடாது, ஏன் செய்யக்கூடாது,
பெண் குழந்தைகளை சகோதரிகளாக நினைத்து பழக வேண்டும் என்பதை சிறுவயதில்
இருந்த சொல்லி வளர்க்க வேண்டும். ஆபாச இணையதளங்களும், ஆபாசங்களும் மொபைல்
ஊடுருவிவிட்ட இந்த காலத்தில் குழந்தைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
ஒன்றே இதுபோன்ற மோசமான சம்பவங்களை தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக