வியாழன், 1 அக்டோபர், 2020

பெண்களுக்கு பேராபத்து மிக்க இந்தியா.. Esther Nathaniel. மலையகம் இலங்கை

Esther Nathaniel
: · பெண்களுக்கு பேராபத்து மிக்க இந்தியா இந்தியா பெண்களுக்கு  பாதுகாப்பில்லை என்ற சர்வதேசத்தின் பார்வை முற்றிலும் உண்மைதான்.அதை இந்தியாவே உறுதிப்படுத்துகிறது. சாதியும் தீண்டாமையும் மதமும் என்று ஒழிந்து அழிந்து நாசமாக போகும் நாளில்தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனலாம். நான் ஒரு இந்திய வம்சாவழி என்ற வரலாற்றில் என்னைச் சேர்ப்பதையும் வெட்கமாக நினைக்கிறேன்
பெண்ணைத் தொடுபவனை பாகுபலியில் கொலை செய்யும் காட்சி வரும் இது உங்கள் சினிமாவில் மட்டும் முடியும்.

நேற்று உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணொருவர் (சிறுமி )கூட்டுப்பாலியல் வன் கொடூரத்துக்கு ஆளாகி வெட்டிக்கொன்றுள்ளார்கள்கள் மேலும் இந்திய இளைஞர்களின் மனநிலை மிகவும் மோசமாகவும் சாதிய வாதங்களால் கறல் பிடித்து போகும்போது பயமின்றி மிகத்துணிச்சலுடன் இப்படியான செயல்களில் இறங்குகிறார்கள்.
எத்தனைத் துயர் இந்த இளம் பெடியன்களின் வாழ்வியல் சூழல் வளர்ப்பு பிற மக்கள் மீதான வெறுப்பு இப்படி துணிந்து கொலைளை செய்யுமளவு வக்கிரமான வாழ்வியல் வளர்ப்பு நிலைகளை மிக அவதானமாக சிந்திக்கத்தூண்டூகிறது.  பெண்களை வன்கொடூரத்துக்கு ஆளாக்கி கொன்று எரித்து வெட்டும் மனநிலையை பாரத மாதாவின் குழந்தைகளுக்கு பாரதமாதாவா சொல்லிக்கொடுக்கீறார் இல்லை பிசாசுகளுடன் பிறந்து வாழ்கிறார்களா???
நேற்று இந்திய உச்சநீதிமன்றம் பாபர் மசூதி அடீத்து இடிக்கப்பட்டமைக்கு தகுந்த ஆதாரம் இன்மையால் வழக்கிலுள்ள குற்றவாளிகளை விடுவித்தது. இந்தச் சூழலில் இளம் சிறுமி நேற்று கொலை செய்யப்பட்டமை முழு உலகமும் இந்தியாவின் பேரில் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.
இங்கு அதிர்ச்சியடைய எதுவுமேயில்லை பெண்களை எப்போதும் இந்தியா மதிப்பதில்லை அவர்களை ஒரு போகப்பொருளாக ஆண் குழந்தைகளை மட்டும் பிரசவிக்க வேண்டூமென்ற ஒரு கட்டாயச் சாதனமாக பெண்களின் யோனி மட்டுமே வேண்டும் அதுக்கு மட்டுமே அவர்கள் என்ற மிகக்கொடூர மனநிலை பல மாநிலங்களில் துளியும் மாற்றமின்றி வளர்ந்துக்கிடக்கிறது
ஆசிப்பா என்ற பச்சைக்குழந்தையை கடவுளுக்கு மூன்று நேரமு
ம் மணியடித்து பூஜை வைக்குமிடத்தில் மிக மோசமாக நடத்திக்கொன்றார்கள் உங்களின் சாதி வெறி தீண்டாமையை அக்குழந்தைக்கு தெரியூமாடா முட்டாள் ஜந்துக்களே உங்கள் வன்மத்தை அரசியல்வாதிகள் மீது காட்டுங்கள்.
இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடுதான் அங்கே ஜனநாயகம் இருக்கிறதா????பெண்களை மதிக்கும் காப்பாற்றும் நாடுதான் ஜனநாயக நாடு.அதனை பாடசாலைக்கல்வியில் சேருங்கள். பெண்ணின் நாக்கை வெட்டி காலை உடைத்து மிகக்கொடூரமனநிலையை அந்த ஏழையும் இயலாமையும் கொண்ட மக்கள் மீது காட்டுவது எந்த அசோக தர்மம்
மாதா மாதா என்கிறீர்கள் மாதாவின் மார்புகளை அல்லவா அறுக்கிறீர்கள். தேசம் இன்று இந்தியாவில் எந்த நாட்டையும் விட கொரொணா மிக வேகமாக மோசமாக பரவி வருகிறது இது ஒரு சாபக்கேடு.
இந்திய ஆட்சியாளர்கள் சாதித்துவம்தீண்டாமையை முற்றிலும் கொன்றொழிக்கவேண்டூம் கடும் சட்டம் செய்ய வேண்டும் சக மனிதனை மனிதனா கப் பார்க்க கற்றுக்கொடுக்க முயற்சியாவது செய்யுங்கள்.
இந்திய மக்களின் உள்ளத்தில் இரத்தத்தில் புரையோடி ஊறிய சாதி ஆணவ சிந்தனை இன்னும் எத்தனை பெண்களின் யோனிகளை குதறப்போகுதோ அந்த இந்திய பாரத மாதாஜிக்கே தெரியாது.
பெண்கள் பஸ்சில் ரயிலில் தனிமையில் வீட்டில் மைதானத்தில் வேலைதளத்தில் இப்படி எங்குமே ஒரு பாதுகாப்பற்ற பயங்கரசூழல் இந்தியாவில் உண்டூ அதுவும் இப்படி தாழ்த்தப்பட்டோரை உயர்சாதி என அழைப்போர் எதுவும் செய்யலாம் என்ற தடித்தனம் இந்தியாவில் மட்டுமே உள்ளது.
இந்தியா மீதான நம்பிக்கை ஒரு சீட்டுக்கட்டைப்போல் சரிவது என்பது மறைக்க முடியாத உண்மை.மதங்களால் பிணையப்பட்ட மக்கள் வாழ்வியல் போலியும் பொய்யும் ஏராளமாகிவிட்டது.
இந்த இஸ்லாமியக்
குழந்தைக்கு நீதி வேணும் என ஒரு கூட்டம் கத்தும் போராடும் சிலநாளில் அது ஒரு சாதாரண செய்தியாகிடும் குற்றவாளிகள் சிறைகளில் நிம்மதியாக ஓய்வெடுப்பார்கள் பத்துவருடமோ இருபது வருடமோ ஆகும் தீர்ப்பு வெளிவர அப்போது புதிய குற்றவாளிகள் இன்னும் அதிகமான பாலியல் குற்றங்களோடு அடுத்த வழக்கில் இருப்பார்கள்.
பிரதமர் மோடிஜி அவர்களே பெண்களை மதிக்கும் நீங்கள் வாத்துக்களை படம் எடுக்கும் நேரத்தில் யாருக்குமே தெரியாமல் கடும் விசத்தோடு யாருடைய யோனிகளை தீண்டலாம் என சுற்றித்திரியும் விசப்பாம்புகளின் தலையை வெட்டி சீவும் சட்டங்கள் உருவாக வழிசமைக்க வேண்டும் அல்லாவிட்டால் தேசம் ஒவ்வொரு தாயின் சாபத்தால் கருகிச்சாகும் நாள் வெகு தொலைவிலில்லை
இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
விடியலே துர்ச்செய்தி வருகிறது
நிச்சயம் இந்த கொடுமைக்கு தகுந்த நீதி வேண்டும்
எஸ்தர்
மலையகம்
இலங்கை

கருத்துகள் இல்லை: