செவ்வாய், 29 செப்டம்பர், 2020

2ஜி வழக்கு அப்பீல்: தினமும் விசாரணை!

minnambalam:; 2ஜி விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதி முத
ல் தினமும் நடத்த வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசா மீது 2 ஜி அலைவ
ரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததும் பதவியை ராஜினாமா செய்தார். பின் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆ.ராசாவை தவிர இந்த வழக்கு விவகாரத்தில் கனிமொழி, கலைஞர் டிவியின் அப்போதைய தலைவர் சரத்குமார். தொழிலதிபர் ஷாகித் பால்வா உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21, 2017 அன்று விடுதலை செய்தது.   இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்த இரு விசாரணை அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன.

கடந்த 21 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பான வழக்கறிஞர்கள், “இது நாட்டின் முக்கியமான வழக்கு என்பதால் இதை அவசர வழக்காக விரைவாக விசாரிக்க வேண்டும்” என்று கோரினார்கள்.

இந்த வழக்கை இன்றைக்கு (செப்டம்பர் 29)ஒத்திவைத்திருந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, “ 2ஜி தீர்ப்புக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க எவ்வித தடையும் இல்லை.இந்த வழக்கை அக்டோபர் 5 முதல் தினமும் பிற்பகல் 2:30 மணிக்கு விசாரிக்கலாம்”என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி. இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: