வியாழன், 1 அக்டோபர், 2020

உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழப்பு . தொடரும் கொடுமை: ஹத்ரஸ் பாலியல் சம்பவத்தை அடுத்து

தினத்தந்தி   : உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 22 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு

உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். பால்ராம்பூர் சம்பவத்தில், லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இறந்தார். வேலைக்கு சென்ற பெண் உடலைல் காயங்களுடன் திரும்பி உள்ளார். 

 அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூர் சம்பவத்தை மூடிமறைத்ததாக மாநில அரசை கண்டித்து உள்ளார். "ஹத்ரஸுக்குப் பிறகு, இப்போது பால்ராம்பூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் காயங்களால் இறந்துள்ளார்" என்று அவர் டுவீட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடுமை: 

ஹத்ரஸ் பாலியல் சம்பவத்தை அடுத்து மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார். 

புதுடெல்லி: உத்தரபிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உயர்சாதி ஆண்களால் 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு, ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டு துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.


இதற்கிடையே, டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு, பெண்ணின் குடும்பத்தினரை போலீஸ் பாதுகாப்புடன் ஹத்ராஸ் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் குடும்பத்தினர் , உரஇனர் இல்லாம்லேயே  ஹத்ராஸ் மாவட்டம் பூல் காரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், பெண்ணின் உடலை போலீசார் தகனம் செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த் சம்பவத்தின் வெப்பம்  தணிவதற்குள்  இதேபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 22 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இரண்டு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 

பால்ராம்பூர் சம்பவத்தில், லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இறந்தார்.

வேலைக்கு சென்ற பெண்  உடலைல் காயங்களுடன் திரும்பி உள்ளார்.  அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூர் சம்பவத்தை மூடிமறைத்ததாக மாநில அரசை கண்டித்து உள்ளார். "ஹத்ரஸுக்குப் பிறகு, இப்போது பால்ராம்பூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் காயங்களால் இறந்துள்ளார்" என்று அவர் டுவீட் செய்துள்ளார்

கருத்துகள் இல்லை: