
நக்கீரன் :
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த
செங்கப்பள்ளியில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆனந்த்,
தனது வீட்டின் தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமர்ந்து,
இரட்டைக்குழல் நாட்டுத்துப்பாக்கியை கீழிருந்து மேலாக தொண்டை நோக்கி வைத்து
அழுத்தி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரமத்தில் வேலூரில் நர்சிங் ஹோம் வைத்து
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்த ஆனந்தின்
தற்கொலைக்கான காரணம் குறித்து, ஆனந்தின் குடும்பத்தினர், உறவினர்களிடம்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனந்தின் மனைவி கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மருத்துவர்
ஆனந்திற்கு பலகோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதால், அவரின் தற்கொலைக்கு
பணப்பிரச்சனை காரணமாக இருக்காது என்று போலீசார் கருதுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக