வேதாரண்யம்
அருகே நேற்று மாலை முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்
வன்முறையாக வெடித்தது. காருக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. காவல் நிலையம்,
மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தபபட்டது. இதனால் பாதுகாப்பு
கருது அங்கு போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்
அம்பேத்கர் சிலை புதிதாக நிறுவப்பட்டது |
Samayam Tamil |
வேதாரண்யம் அருகே இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்-
வேதாரண்யம் அருகே இரு சமூகத்தினருக்கு இடையே பயங்கர மோதல் வலுத்துள்ளதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை
மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று தனது
பொலிரோ காரில், ராமகிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருந்தபோது ராமச்சந்திரன்
(24) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.
இவர்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்த நிலையில், விபத்து காரணமாக
இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காவல் நிலையம் எதிரே நின்று
கொண்டிருந்த பொலிரோ காரை ஒரு சமூகத்தினர் தீ வைத்து கொளுத்தினர். இதனால்
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.
இதனிடையே, எதிர்தரப்பைச் சேர்ந்த கும்பல் அங்கு நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தினர். காவல் நிலையம் மீதும், காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
தகவல் அறிந்த எஸ்பி ராஜசேகரன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால், வேதாரண்யம் காவல் நிலையத்தில் இரு பெண் போலீசார் மட்டுமே இருந்தனர். அவர்களால் கலவரத்தை தடுக்க முடியவில்லை.
நிலைமை மோசமானதை அடுத்து மற்ற பகுதிகளிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இரு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக