வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

என்னப்பா நம்ம ஊரு இட்லிலாம் கிடைக்குது!’ – லண்டனைக் கலக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி ந.பொன்குமரகுருபரன் - விகடன் : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்சூட்டில் கலக்கி வருகிறார். தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஆகஸ்ட் 28-ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் கிளம்பினார். இன்று சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில், தொற்று நோய் தடுப்புச் சேவை, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாடு குறித்து இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
லண்டனில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவையை நேரில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் சூழலுக்கு ஏற்றவாறு, ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தி வழங்குவது குறித்து லண்டன் தேசிய சுகாதாரச் சேவை மையத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். முதல்முறையாக கோட் சூட்டில் முதல்வரைப் பார்த்த அதிகாரிகள் பலரும், `சார், இன்னைக்கு பிரமாதமா இருக்கீங்க’ எனப் பாராட்ட, எடப்பாடியாரின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டதாம்.
காலை தாம் தங்கியிருந்த லண்டன் ஹோட்டலில் உணவருந்தியபோது, எடப்பாடிக்கு இட்லி, பொங்கல், வடை என தடபுடலாகச் சிற்றுண்டி பரிமாறப்பட்டுள்ளது. `நம்ம ஊரு டேஸ்ட்டுலயே இட்லிலாம் இருக்கேப்பா..’ என வியந்து பாராட்டிய முதல்வர், ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடக் கிளம்பினாராம்.
எடப்பாடியார் கோட்சூட்டில் இருக்கும் படங்கள்தான் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. முதல்முறையாக கோட்சூட்டில் எடப்பாடியாரைப் பார்த்த அதிகாரிகள் பலரும், `சார், இன்னைக்கு பிரமாதமா இருக்கீங்க’ எனப் பாராட்ட, எடப்பாடியாரின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டதாம். தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டவர் ப்ரிட்ஜ், 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிக் பென் கடிகாரக் கட்டடம், பிரிட்டன் அருங்காட்சியகம், பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடாகியுள்ளது.
லண்டன் கேம்பர்வெல்லில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காகச் செல்லும் முதல்வர், அங்கு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் திட்டமிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்ற இம்மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் நேரில் கேட்டறிகிறார்.
மூன்று நாள்கள் லண்டனில் பல்வேறுகட்ட ஆய்வுப் பணிகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முதல்வர், செப்.1-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் செல்லவுள்ளார். செப்.2-ம் தேதி, அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசும் முதல்வர், சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, சான் ஹூசே பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.
செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பும் வழியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்துக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி செப். 10-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
vikatan.com</

கருத்துகள் இல்லை: