tamil.samayam.com :
ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. /
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்நிலையில் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கலந்து கொண்டால், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை, காஷ்மீரில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக