நக்கீரன் :
கலப்பட
மருந்தால் வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் உடல் முழுவதும் உரோம வளர்ச்சி
ஏற்படும் நோயால் ஸ்பெயின் நாடு முழுவதும் இதுவரை 17 குழந்தைகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் மலாகாவை தலைமையிடமாக
கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் என்ற நிறுவனம் தயாரிக்கும்
ஜீரணகுறைப்பாட்டை சரி செய்யும் மாத்திரையில், மைனாக்ஸிடில் எனும் வழுக்கை,
முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்துள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளின் ஜீரண குறைபாட்டை போக்க
தரப்படும் இந்த மருந்தில் முடி வளருவதற்கான வேதிப்பொருளை கலந்ததால்,
குழந்தைகளின் உரோம வளர்ச்சி அதீதமாக மாறியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் கான்டபரியா, ஆண்டலூசியா உள்ளிட்ட நகரங்களில் 13 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் நோய் தாக்கியது கண்டறியப்பட்டது. பின்னர் அக்குழந்தைகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விநியோகிக்கப்பட்டு இந்த மருந்தை முழுவதுமாக திரும்ப பெற முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. இந்த மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏற்கனவே நிறைய மருந்துகள் விற்கப்பட்டு, பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக