ww.allahvin.com :
ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை இலங்கையில் அறிமுகம் செய்து வைத்த சாபம் ஜமாத்தே
இஸ்லாமியையே சாரும். 80 களில் இருந்தே இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத்
பயிற்சிக்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும், காஷ்மீர்
பிராந்தியத்திற்கும் ஜமாத்தே இஸ்லாமி அனுப்பி வைத்து வந்துள்ளது.
ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு சொந்தமான மாதம்பை இஸ்லாஹியா அரபுக்
கல்லூரியின் முதலாவது அதிபரான A.G.M. நதீர் மெளலவி அவர்கள், தான் ஜமாத்தே
இஸ்லாமி இயக்கத்தின் மூலம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஹாத் பயிற்சிக்காக
சென்று வந்தமை குறித்து நெத் FM வானொலிக்கு அண்மையில் முழுமையான வாக்கு
மூலம் ஒன்றை சிங்களத்தில் வழங்கி இருந்தார்.
இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதுதான் ஜமாத்தே இஸ்லாமியின் இறுதி
இலக்கு என்பதை அந்த அமைப்பு அதனது வதிவிட பயிற்சி வகுப்புகளிலும்,
போதனைகளிலும் குறிப்பிட்டு வந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு நான் பங்கு பற்றிய
வதிவிடப் பயிற்சி வகுப்பு ஒன்றில் ஹஜ்ஜுல் அக்பர் மேற்படி விடயம் குறித்து
எமக்குக் கற்றுத் தந்துள்ளார். மேலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு
வாழ்வது அல்லாஹுவுக்கு செய்யும் மிகப்பெரும் இணைவைப்பு, பாவம் என்றும்
எமக்குக் கற்றுத் தரப்பட்டது.
அண்மைக் காலத்தில் ஜமாத்தே இஸ்லாமியை சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் துருக்கி நாட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். சாஹித் அப்துல்லாஹ் ஹக் அவ்வாறு சிரியா சென்று ISIS உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட ஒருவராவார்.
ஜமாத்தே இஸ்லாமியின் அன்று முதல் இன்று வரையான செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பாகும். றிஷ்வின் இஸ்மத்<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக