செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகிறாரா சசிகலா?- டிடிவியின் நிலை : அமமுக புகழேந்தி பரபரப்பு பேட்டி

tamilthehindu : அதிமுகவுக்கு சசிகலாவை தலைமை ஏற்கவைக்க ஈபிஎஸ் தரப்பினர் முயல்வதாக தகவல் கசியும் நிலையில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்பாரா என்பது குறித்து அமமுக கர்நாடக மாநில செயலாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
is-sasikala-going-to-lead-the-aiadmk-interview-with-aiadmk-pukalenthiஇதுகுறித்து காமதேனு வார இதழுக்கு அளித்த பேட்டி: சிறையிலிருக்கும் சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பினர் தொடர்பில் இருப்பதாகச் சொல்கிறார்களே..?
சின்னம்மா சிறைக்கு வந்த புதிதில் 13 அமைச்சர்கள் இங்கு வந்தார்கள். அவங்கள எல்லாம் நான்தான் சிறைக்கு அழைத்துச் சென்று சின்னம்மாவை சந்திக்க வெச்சேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சின்னம்மாவை சந்திக்க வருவதாக மூன்று முறை என்னிடம் பேசினார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை... கடைசிவரை அவர் வரவே இல்லை. இருந்தாலும் எடப்பாடியாருக்கு நம்பிக்கை தூதுவர்கள் யாராவது சின்னம்மாவுடன் அவருக்காகத் தொடர்பில் இருக்கலாம்.

அதிமுகவுக்கு இப்போது ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது. அந்தத் தலைமை சசிகலாவாக இருந்தால் சரியாக இருக்கும் என ஈபிஎஸ் தரப்பில் நினைப்பதாகச் சொல்கிறார்களே..?
அப்படி அவர்கள் நினைப்பது உண்மையாக இருந்தால் அதை நான் மனதார வரவேற்கிறேன். சின்னம்மாவை அவர்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டால் தமிழகத்து அரசியல் வானில் மிகப்பெரும் திருப்பம் ஏற்படும்.
அப்படியொரு சூழல் வந்தால் தினகரனின் நிலை?
அவரும் அதிமுகவில் சேர்ந்து இருக்க வேண்டியதுதான்.
அவரை அதிமுக அமைச்சர்கள் ஏற்க மறுக்கிறார்களே..?
ஜெயக்குமார் ஒருத்தர்தான் தகறாறு செய்கிறார். சின்னம்மா வந்துட்டாங்கன்னா அதையும் சரி பண்ணிருவாங்க. சீக்கிரமே அப்படியொரு நாள் விடியும்னு எதிர்பார்க்கிறேன்.
அடுத்தும் அதிமுக ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
வேலூர் இடைத்தேர்தலிலேயே அதற்கான மாற்றம் தெரிய ஆரம்பித்துவிட்டது. எனவே, பிளவுபட்டு நிற்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சசிகலா என்ற ஆளுமைத் தலைமையை ஏற்றுக்கொண்டால் நிச்சயமா அம்மா ஆட்சி தொடரும்

கருத்துகள் இல்லை: