செல்வகுமார் நக்கீரன் :
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு
சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை
உடைக்கப்பட்டதால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்கிற பாண்டியன், இவர் முக்குலத்து புலிகள் அமைப்பில் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கும் வேதாரண்யம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்து மக்களுக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினையாகியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச்சேரந்த ராமகிருஷ்ணன் என்பவரின் காலை பாண்டியனின் தரப்பு வெட்டி வன்மத்தை மூட்டியிருக்கிறது.
இந்தநிலையில் பிரச்சனை அமைதியாகியிருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாண்டியன் தனது பொலிரோ காரில் வந்து வேதாரண்யம் காவல்நிலையத்தின் வாசலில் நிறுத்திவிட்டு காவல்நிலையத்திற்குள் சென்றிருக்கிறார்.
ஏற்கனவே வெட்டுபட்ட கோபத்தில் இருந்த ராமச்சத்திரன் தரப்பினர் பாண்டியனின் காரை காவல்நிலையத்திற்கு முன்பே தீவைத்து கொலுத்தினர். அதனை கண்டு ஆத்திரம் அடைந்த பாண்டியனின் சமுகத்தினரும், அவரது ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு வேதாரண்யம் பேருந்து நிலையத்தின் வாயிலில் இருந்த டாக்டர் அம்பேத்கரின் சிலையை உடைத்து தலையை துண்டாக்கியதோடு, தலையை கீழே உருட்டினர். அதோடு ஆத்திரம் குறையாத பாண்டியன் தரப்பு வேதாரண்யத்தில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் கடைகளை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கினர். இவ்வளவும் காவலர்களின் கண் பார்வையிலேயே அறங்கேறியதாக கூறி தாழ்த்தப்பட்ட சமுகத்தினர், ஒன்றுகூடி சிலை உடைப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான போலிஸார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது, அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் நாளை ஆர்பாட்டம் செய்ய உள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக