வட
இந்தியாவில் குறிப்பாக BIMARU மாநிலங்கள் எனக் குறிக்கக் கூடிய பீகார்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் எப்படி தமிழகத்தின்
வேலைவாய்ப்பினை குறிப்பாக அரசு வேலை வாய்ப்பினை வட இந்தியர்கள்
ஆக்கிரமிப்புகள் செய்ய இயலும் என்பதற்கு ஆதாரமாய் பல காணொளிகள்
அங்கே பகிரப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நமது இன்றைய துணை முதல்வர் திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக இருந்த பொது செய்த சட்ட திருத்தும் ஆகும். ஆனால் கர்நாடகத்திலோ, இமாச்சல் பிரதேசத்திலோ, குஜராத்திலோ என இன்னும் பல மாநிலங்களில் 80 % பேர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறக் கூடிய சூழலே நிலவி வருகின்றது.
இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது குறிப்பாகச் சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பது தமிழகம் வரி ரீதியாக, ஆனால் கணக்குகளின்படி மஹாராஷ்ட்ரா மாநிலம் தான் முதல் இடம் இருப்பதாக நம்மில் பலர் நம்பி வருகின்றோம்.
ஆனால் அதை எவ்வாறு நோக்க வேண்டும் எனில்
தமிழகத்தில் இருக்கும் தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானங்கள் செலுத்தக் கூடிய வரியில் தமிழகத்தின் கணக்கு பார்க்கப் படுகின்றது.
ஆனால் மகாராஷ்டிராவின் வருமானம் ஏண் அதிகம் பார்க்கப்படுகின்றது என்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் முதல், பல தொழிற்சாலைகளின் தலைமை நிறுவனங்கள் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு அங்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள காரணத்தினால் அந்த தொழிற்சாலைகள் அந்த மாநிலத்தில் இல்லாவிட்டாலும் , வேறு எந்த மாநிலத்திலிருந்தாலும்
உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ளது ஆனால் அவர்களின் வரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவிடப்படுகின்றது.
இது போல் பல நிறுவனங்கள் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு உள்ளதால் அந்த வருமானங்கள் மகாராஷ்டிராவின் கணக்கில் அதிகமாகப் பதிவு செய்யப் படுகின்றது.
இருந்தாலும் இந்தியாவில் தமிழகம் தான் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம். அதிலும் முப்பது சதவீதம் நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், கல்வி, மருத்துவம் போன்ற சமூகத் தேவைகளுக்காகவும் திருப்பி கிடைக்கின்றது.
மீதி எழுபது சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு எடுத்து அதை உத்திர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஏழை மாநிலங்களுக்குக் கொடுத்து விடுகின்றது.
மேலும் நமது வருமானத்தை ஹிந்தி மொழியைப் பரப்புவதற்கும், ஹிந்தியை கற்றுக் கொடுப்பதற்கும், திணிப்பதற்கு, நமக்கு எதிரானவற்றைச் செயல்படுத்தவும் நமது வருமானங்கள் செய்யப்படுகின்றது
தமிழகத்தில் இருக்கக் கூட நடுவண் அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகள் நெய்வேலி NLC, கல்பாக்கம் கூடங்குளம், வருமான வரித் துறை, ரயில்வே இப்படி நடுவண் அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தமிழர்களின் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட மாநிலங்களுக்கு அளித்துக்
குறிப்பாகச் சென்னை வருமான வரித் துறை அலுவலகம் சென்று இருந்தால் நாம் அனைவரும் அறியலாம், உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் உள்ள ஒரு உணர்வு நமக்கு ஏற்படும்.
நாற்பது வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் கடந்த சில வருடங்களாக வட இந்தியர்கள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்பட்டு வருவது அறிய முடியும்.
இவ்வாறாக நமது வருமானத்தையும் எழுபது சதவீதம் எடுத்துக் கொண்டு, நமது வேலைவாய்ப்பையும் நிமிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு இப்பொழுது இறுதியாக 2017 ஆண்டு முதல் இருக்கும் அரசாங்கத்தினால் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய TAMILNADU PUBLIC SERVICE COMMISSION வேலை வாய்ப்பிற்கும் வட இந்தியர்கள் திட்டமிட்டுக் குறிவைப்பதற்கு இந்த காணொளியே எடுத்துக்காட்டு.
தமிழர்க்கும் தமிழக மக்களுக்கும் இளைக்கப் படுகின்ற அநீதிகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .
- கார்த்திகேய சிவசேனாபதி
25-08-2019

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக