தினத்தந்தி : லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில்
தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு
இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
லண்டன்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக
சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக லண்டன்
சென்றடைந்தார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு
அளித்தனர்.
புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின்போது, முதல்வர் பழனிசாமி, சுகாதார நலத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் இருவரும் கோட், சூட் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி
தற்போது வைரலாகி உள்ளது
லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முன்னிலையில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. லண்டன் நேரப்படி காலை 9
மணியளவில் இங்கிலாந்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயனாளர்களின் பணி
தரம் மேம்பாடுதலை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும்
வகையில் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதல்வர் பழனிசாமி
சந்தித்தார். அப்போது சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகின.
கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின.
கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின.
இந்நிகழ்வின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக